Friday, November 24, 2006

இந்திய கிரிக்கெட் அணியின் அடிமைத் தன்னிலை !

டர்பனில் நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியை கண்டு "களித்த" இந்திய வம்சாவழி ரசிகர் ஒருவர் "இந்திய அணி இயங்கிய விதமும், அதன் ஆட்டமும், அடிமைகள் தங்கள் முதலாளிகளுக்கு தலை வணங்கி நடப்பது போலவே இருந்தது" என்று படு காட்டமாக விமர்சித்தார் ! மற்றொரு ரசிகை, "நமது வீரர்கள், பலமற்ற சாதுவான கோழைச் சிறுநாய்கள் (sheepish lapdogs) போல், தங்களை தென்னாபிரிக்க அணி மிரட்டிப் பணிய வைக்க ஏதுவாக நடந்து கொண்டனர்" என்று கடுப்பியிருக்கிறார் !

கொழுவி பாணியில் சொல்ல வேண்டுமானால், "என்னை செருப்பால் அடியுங்கள், ஏனெனில் நான் புதனன்று இந்தியா-தென்னாபிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்தேன்!" என்று தான் அடியேன் கூறுவேன் :)

டர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா சந்தித்த அவலமான தோல்வியை டிவியில் காணும் அவலம் எனக்கு ஏற்பட்டது துரதிருஷ்டமே :( முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக அணி, ஜேக் காலிஸ் அடித்த சதத்தின் வலிமையால், 248 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் நன்றாக பந்து வீசிய அகர்கார், தனது கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து, எதிரணிக்கு தன்னாலான தொண்டாற்றினார் !

வெற்றி பெற 249 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா, 62-2 என்ற ஸ்கோர் வரை, ஓரளவு நம்பிக்கை தரும் வகையில் ஆடிக் கொண்டிருந்தது. முக்கியமாக, சச்சின் தனது பழைய பாணியில், கவனமும், aggression-ம் கலந்து சிறப்பாகவும், டிராவிட் 'சுவர்' போலவும், ஆடிக் கொண்டிருந்தனர். அடுத்த 3 பந்துகளில் ஆட்டம் திசை மாறியது. சச்சினும், டிராவிட்டும் இரண்டு அருமையான பந்துகளுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்கோர் 62-4.

தென்னாபிரிக்க அணி லேசான ரத்த வாடையை முகர்ந்து விட்டது ! அதற்குப்பின், பெவிலியனை நோக்கிய (சவ) ஊர்வலம் தொடங்கியது ! தென்னாபிரிக்காவின் நெஞ்சளவு மற்றும் வெளி நோக்கி வீசப்பட்ட வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல், திருவாளர்கள் சுரேஷ் ரயினா (நயினாவுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தாகி விட்டது!), பீம பலம் வாய்ந்த தோனி, மோ(சோ)ங்கியா மற்றும் நமது பந்து வீச்சாளர்கள் கிடுகிடுவென தங்கள் விக்கெட்டுக்களை பறி கொடுத்தனர் !

ஒரு கட்டத்தில், இந்திய அணி 28 பந்துகளில், 2 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்ததை வைத்துப் பார்க்கும்போது, நமது அணி வீரர்கள் எவ்வளவு மன உறுதி, சூடு, சொரணை மிக்கவர்கள் என்பதை நாம் கண்டு கொள்ளலாம் ! அணியில் மூன்று வீரர்களே ஈரிலக்க ரன்கள் (சச்சின் 35 ரன்கள்) எடுத்தனர். இந்தியா 91 ரன்களுக்கு (29.1 ஓவர்களில்) சுருண்டது, வெட்கக்கேடு போல் தோன்றினாலும், பூரண சரணாகதித் தத்துவத்தை எனக்கு புரிய வைத்ததற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் !

முன்பு நான் 2002-இல், இந்தியா-நியூஸிலாந்து போட்டிகளுக்குப் பின் ரீடி·ப் இணைய தளத்தில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது, நான்கு வருடங்களுக்குப் பின்னும் மாறாமல் இருப்பது வேதனையான விஷயம். அக்கடிததில்,"Losing is a part of every sport, but the manner in which our "star" (sponsor created status for many in our team !) studded team lost to a lowly NZ team was very mortifying, to say the least, to our National Spirit." என்று கூறியிருந்தேன். நானும் திருந்தாமல், இன்னும் நம்பிக்கையோடு இந்தியா ஆடும் கிரிக்கெட் ஆட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது இன்னொரு வேதனையான விஷயம் !

இன்று வரையில், சச்சின், டிராவிட் தவிர்த்து, வேகப்பந்து வீச்சுக்கு உதவும் bouncy ஆடுகளங்களில் தைரியமாக நின்று திறனுடன் விளையாட வல்ல வீரர்கள் உருவாகவில்லை என்பதற்குக் காரணம், இந்தியாவில் காணப்படும் பயனற்ற, Batsmen's Paradise என்றழைக்க வல்ல ஆடுகளங்களே என்பதை அனைவரும் அறிந்திருந்தும், பணத்தில் கொழிக்கும், அரசியல் வகை குடுமிப்பிடி சண்டைகளுக்கு பேர் போன, கேடு கெட்ட BCCI, நாடு முழுதும் நல்ல ஆடுகளங்களை அமைக்க, உருப்படியாக எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. கோபத்தில், மேலே உள்ளது பெரிய வாக்கியமாக அமைந்து விட்டது !

இத்தோல்வியின் எதிரொலியை பாராளுமன்றத்திலும் கேட்க முடிந்தது ! சில MP-க்கள் இந்தியத் தோல்வி ஏற்படுத்திய மன வருத்தத்திலும், கோபத்திலும், க்ரெக் சாப்பலை பயிற்சியாளர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டனர். சந்தித்து வரும் தொடர் தோல்விகளிலிருந்து இந்திய அணி விடுபடவேண்டி, BCCI-யின் தலைவரான சரத் பவார் என்னென்ன முயற்சிகள் எடுக்கவுள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பிஜேபியின் மூத்த தலைவரான விஜய்குமார் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார் ! ரொம்ப முக்கியமான நாட்டுப் பிரச்சினை இல்லையா இது ??? அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தரகர்கள் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும், இந்திய கிரிக்கெட், சண்டை சச்சரவில்லாமல், முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

இந்த தோல்விக்குப் பின்னும் டிராவிட் தனது அணி வீரர்களைக் காய்ச்சாமல், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஒரு பேட்டியில் பேசியிருப்பதை பாராட்டலாம். மனச்சோர்வு அடைவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், இம்மாதிரி ஆடுகளங்களில் நின்று ஆடுவதற்கு அவசியமான உத்திகளை அணி வீரர்கள் கை கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை 'நம்ம' பயங்க என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம், என்ன இருந்தாலும், வாழ்க்கையில நம்மளுக்கும் நம்பிக்கை வேணும் இல்லயா :)))

என்றென்றும் அன்புடன்
பாலா

### 261 ***

16 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will be the first comment :)))

ச.சங்கர் said...

அட போங்கப்பா..போயி பொழப்பை கவனிங்க :))))

enRenRum-anbudan.BALA said...

Sankar,
Thanks for your ADVICE :)))

லொடுக்கு said...

எல்லாம் எங்க 'தல' கங்குலி வச்ச பில்லி-சூன்யந்தாப்பூ.

Sridhar Narayanan said...

பாலா அவர்களே,

நான் அந்த மேட்ச்-ஐ பார்க்கவில்லை. ஆனால் அதைப் பற்றிய விமர்சனங்களைப் படித்தேன். என்ன செய்வது நாமும்தான் பலப்பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கோம். ஆஸ்திரேலிய கோச், மனோதத்துவ முகாம், scientific post-match analysis யோகா பயிற்சி... அடிப்படையில் அந்த போராட்ட குணம் பரிமளிக்கவில்லை இன்னும். போராட்ட குணத்திற்கு பாகிஸ்தான் அணி ஒரு நல்ல உதாரணம்.

உலகிலேயே பணக்கார விளையாட்டு அமைப்பாக இருக்கும், BCCI சர்வதேச விளையாட்டுகளுக்கும், தேசிய அளவிளான விளையாட்டுகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

உள்நாட்டு ஆட்டக் களங்கள் மேம்படுத்தப்பட்டு சர்வதேசம் தரம் வாய்ந்த்தாக இருக்கவேண்டும். தற்சமயம் இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் வேகம் தேவை.

வேகப் பந்து வீச்சிலும், அதிரடி ஆட்டத்திலும் (baseball type), fielding-லும் கவனம் செலுத்தி திறமைசாலிகளை உருவாக்க வேண்டும்.

சர்வதேச அளவில் விளையாடும் வீரர்களுக்கு contract முறை இருக்கிறது. அதை அடுத்த கட்ட ஆட்டக்காரர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

Ranji trophy, Duleep trophy போன்ற ஆட்டங்களை இன்னும் முறைப் படுத்தி நமது bench strength-ஐ கூட்ட வேண்டும்.

சரி சரி... இதைத்தானே எல்லாரும் சொல்றாங்க, புதுசா ஏதாவது சொல்லனும்னா 'ச. சங்கர்' சொல்ற அறிவுரைதான் ஞாபகம் வருது :-))

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

லொடுக்கு,
//எல்லாம் எங்க 'தல' கங்குலி வச்ச பில்லி-சூன்யந்தாப்பூ.
//
நன்றி :)))

Sridhar Venkat,
விளக்கமான ஆலோசனைகளுக்கு நன்றி :) உருப்பட்டா சரி !!!

Santhosh said...

//ஆரம்பத்தில் நன்றாக பந்து வீசிய அகர்கார், தனது கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து, எதிரணிக்கு தன்னாலான தொண்டாற்றினார் //
Bala, Is this new or what? Agarkar and Runs for opponent team pirika mudiyathathu :)).. There is no point in blaming need to work good in the existing environment. Lot of problem in selecting team if one young team loses we should not go back to old people like kumble and all oldies and there is not much young people in the team.. I agree s.sankar comment poi velaya parungapa (sorry for the english :).)

enRenRum-anbudan.BALA said...

*******************************
Santhosh,
What you are telling about giving chance to youngsters is OK but when they are introduced in the international arena without enough domestic experience (like Raina) it backfires :( The team should be an ideal mix of young and old (like Australia), is it not ?
********************

enRenRum-anbudan.BALA said...

In the III ODI, SA went on to score 274 from 76/6 at one stage !!!

"இந்திய கிரிக்கெட் அணியின் அடிமைத் தன்னிலை !" is still going strong ;-)

In response, India has lost Sehwag and Sachin with less than 10 runs on the board !!!

But, as usual, I am still watching with "endless" HOPE !!!

Sridhar Narayanan said...

bookmark பண்ணி வச்சுக்க வேண்டிய பதிவு இது-னு நினைக்கிறேன்.

எந்த நேரத்தில இதை எழுதத் தொடங்கினீங்க பாலா?

enRenRum-anbudan.BALA said...

//bookmark பண்ணி வச்சுக்க வேண்டிய பதிவு இது-னு நினைக்கிறேன்.

எந்த நேரத்தில இதை எழுதத் தொடங்கினீங்க பாலா?
//
நன்றி :))):-)))

I still have HOPE ;-)

Amar said...

E.A.B,

I'd be glad if other sports recieve a little more attention than cricket because of the pathetic perfomance of our spineless vagabonds.

கார்மேகராஜா said...

//////ஞாயிற்றுக் கிழமை 'நம்ம' பயங்க என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம், என்ன இருந்தாலும், வாழ்க்கையில நம்மளுக்கும் நம்பிக்கை வேணும் இல்லயா :)))////////


கவுத்துட்டாங்களே!

enRenRum-anbudan.BALA said...

samudra,
What you are telling is true :(

//
கார்மேகராஜா said...

கவுத்துட்டாங்களே!
//
ரொம்ப அப்சட் ஆயிட்டீங்க போல இருக்கு ;-)

//ஒண்டிபுலி said...
எல்லாம் பத்தன (பத்தினிக்கு ஆண்பால்) சாபம்தான்
வேற யாரு சவுரவ் தான்....!!!
//
:)))))

ச.சங்கர் said...

பாலாஜி....நீ சொன்னதற்காக ஒங்க வீட்டுல வந்து இரண்டாவது மாட்ச்சை பாத்துட்டு வந்து காய்ச்சல்ல படுத்தவன்தான்...இன்னும் எழுந்திருக்கவில்லை...நான் சொன்ன அறிவுரையை நானே கடை பிடிக்காததற்கு எனக்கு இதுவும் வேண்டும்...இன்னமும் வேண்டும் :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails